Notation Scheme

வச்சுனு ஹரி - ராகம் கல்யாணி - vaccunu hari - rAga kalyANi

English Version
Language Version

பல்லவி
வச்சுனு ஹரி நின்னு ஜூட3 வச்சுனு ஹரி நின்னு ஜூசி
மெச்சுனு ஹரி நின்னு ஜூசி (வ)

அனுபல்லவி
1குச்சித விஷயாது32சிச்சு ரீதியெஞ்சி நீவு
ஹெச்சுகா3னு மா ஸ்வாமினி மச்சிகதோ நுதியும்பு (வ)

சரணம்
சரணம் 1
தீ4ருனி ஸீதா ராமாவதாருனி ஸகல லோகாதா4ருனி
நிஜ ப4க்த 3மந்தா3ருனி நுதியிம்பவய்ய (வ)


சரணம் 2
4ன்யுனி வேல்புலலோ மூர்த4ன்யுனி ப்ரதி லேனி
லாவண்யுனி பரம காருண்யுனி நுதியிம்பவய்ய (வ)
சரணம் 3
ஏ ஜப தபமுலகு ராடு3 யாஜனாது3லகு ராடு3
ராஜிகா3 நுதியிஞ்சு த்யாக3ராஜ நுதுனி ஈ வேள (வ)


பொருள் - சுருக்கம்
அய்யா!

பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வச்சுனு/ ஹரி/ நின்னு/ ஜூட3/ வச்சுனு/ ஹரி/ நின்னு/ ஜூசி/
வருவான்/ அரி/ உன்னை/ காண/ வருவான்/ அரி/ உன்னை/ கண்டு/

மெச்சுனு/ ஹரி/ நின்னு/ ஜூசி/ (வ)
மெச்சுவான்/ அரி/ உன்னை/ தேடி/ வருவான்...


அனுபல்லவி
குச்சித/ விஷய-ஆது3ல/ சிச்சு/ ரீதி/-எஞ்சி/ நீவு/
இழிந்த/ விடயங்களினை/ நெருப்பு/ போன்று/ எண்ணி/ நீ/

ஹெச்சுகா3னு/ மா/ ஸ்வாமினி/ மச்சிகதோ/ நுதியும்பு/ (வ)
உயர்வாக/ நமது/ இறைவனை/ காதலுடன்/ போற்றுவாய்/


சரணம்
சரணம் 1
தீ4ருனி/ ஸீதா/ ராம/-அவதாருனி/ ஸகல/ லோக/-ஆதா4ருனி/
தீரனை/ சீதா/-ராமனாக/ அவதரித்தவனை/ அனைத்து/ உலக/ ஆதாரமானவனை/

நிஜ/ ப4க்த/ மந்தா3ருனி/ நுதியிம்பு/-அய்ய/ (வ)
உண்மையான/ தொண்டர்களின்/ மந்தாரத்தினை/ போற்றுவாய்/ அய்யா/


சரணம் 2
4ன்யுனி/ வேல்புலலோ/ மூர்த4ன்யுனி/ ப்ரதி/ லேனி/
மங்களமானவனை/ கடவுளரில்/ தலைசிறந்தோனை/ ஈடு/ அற்ற/

லாவண்யுனி/ பரம/ காருண்யுனி/ நுதியிம்பு/-அய்ய/ (வ)
அழகனை/ மிக்கு/ கருணையுடையோனை/ போற்றுவாய்/ அய்யா/
சரணம் 3
ஏ/ ஜப/ தபமுலகு/ ராடு3/ யாஜன-ஆது3லகு/ ராடு3/
எந்த/ ஜப/ தவங்களுக்கும்/ வாரான்/ வேள்விகளுக்கும்/ வாரான்/

ராஜிகா3/ நுதியிஞ்சு/ த்யாக3ராஜ/ நுதுனி/ ஈ/ வேள/ (வ)
முழு மனதுடன்/ போற்றுவாய்/ தியாகராசன்/ போற்றுவோனை/ இந்த/ வேளை/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - குச்சித - குத்ஸித : 'குத்ஸித' என்ற சம்ஸ்கிருத சொல்லின், தெலுங்கு வடிவம், 'குச்சித' ஆகும்.
Top

மேற்கோள்கள்
2 - சிச்சு ரீதி - நெருப்பு போன்று - பாகவத புராணத்தினில் (9-வது புத்தகம், 19-வது அத்தியாயம்), யயாதி, தனது மனைவியிடம், காமத்தின் தன்மையினைப் பற்றி கூறுவது -

"காமம், அதனை அனுபவிப்பதனால், தணிவதில்லை;
நெருப்பினில் இட்ட நெய்யென மென்மேலும் கொழுந்துவிட்டெரியும்."(14)

3 - மந்தா3ருனி - மந்தாரம் - விரும்பியதையளிக்கும் கற்பதரு.
Top

விளக்கம்
இந்தப் பாடல், 'பிரகலாத பக்தி விஜயம்' எனும் நாட்டிய-நாடகத்தின் அங்கமாகும். இதனில், கடலரசன், பிரகலாதனுக்கு, இறைவன் நேரில் தோன்றுவதற்கு, அவனைத் துதிக்க வேண்டுகின்றான்.

விடயங்கள் - புலன் நுகர்ச்சிப் பொருட்கள்
Top